Skip to main content

Posts

Showing posts from December, 2017

உதவி செய் அடுத்தவரை உதவவை

என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் நான் நிறைய உதவி செய்வேன் ஆனால் அந்த உதவிகளை பிறரிடம் கூறினால் அது உதவியே கிடையாது என்று. நிறைய தமிழ் படங்களை பார்த்து கற்றுக்கொண்டிருப்பார் போல. நன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். நாம் செய்யும் செயல் நம் நண்பர்களிடம் கூறும் பொது என்ன நடக்கும். 1. நம்மை பற்றி அவர்கள் அறிவார்கள் 2. நம்மை போல அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் உதவி செய்தல் பிறரிடம் கூற கூடாது என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்களா அல்லது திருவள்ளூர் ஏதேனும் கூறி இருக்கிறாரா. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே நம் மனது நல்லவை விட தீயவையே அதிகமாக ஈர்க்கும். தமிழ் படங்களில் வருவது எல்லாம் பார்த்து ரசிக்கலாம் ஆனால் அதில் வரும் அனைத்தும் உண்மை என்று மட்டும் நம்பி விட வேண்டாம். உதவி மட்டும் அல்ல. நாம் செய்யும் எந்த நல்ல செயல் ஆயினும் அதை பிறரிடம் கூறுவதன் மூலம் அவர்களையும் அச்செயலை செய்ய தூண்டுகோலாக அமையும். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். இந்த பதிவை பிறருடன் பகிரவும்.