Skip to main content

நல்ல எண்ணம் தீய எண்ணம்

நமக்குள் தினமும் 1000 எண்ணங்கள் எழுகின்றன. அவற்றில் சிலது நல்லவை மற்றும் சிலது தீயவை. நமக்கு எழும் எண்ணங்களில் எது நல்லவை மற்றும் எது தீயவை என்று எப்படி அறிவது.

முதலில் நல்லவை என்றால் என்ன தீயவை என்றால் என்ன. ஒருவன் நல்லவை என்று என்னும் எண்ணம் மற்றொருவருக்கு தீயவை என்று தோன்றும். அப்படி இருக்க எது நல்லவை எது தீயவை என்று எப்படி அறிந்து கொள்வது.

நல்லவை தீயவை என்பது அவரவர் மனதை சார்ந்தது. ஒரு செயல் அல்லது எண்ணம் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் அது நல்லது. உடனே நீங்கள் கேட்கலாம், என் எண்ணங்கள் யாவும் நல்லவை என்று என் மனதிற்கு தோன்றுகிறது அதனால் நான் அதை செயல் படுத்தலாமா என்று. மனிதனின் மனம் எந்நேரமும் ஒரு மாதிரி இருப்பது கிடையாது. இன்று நீங்கள் நல்லது என்று என்னும் செயல் நாளை தவறு என்று எண்ணக்கூடும்.

ஆகவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும், உங்கள் எண்ணம் நல்லவை என்பதை உறுதி செய்த பின்பு ஈடு பட வேண்டும்.

உங்கள் எண்ணம் நல்லவை என்பதை நீங்கள் சுலபமாக அறியலாம்.

சமுத்திரக்கனி இன் அப்பா படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் சமுத்திரக்கனி நன்றாக ஒரு வசனம் கூறி இருப்பார்.
சமுத்திரக்கனி மகனிடம் "எது அப்பா கிட்ட சொல்லலாம்னு தோணுதோ அத செய், எது சொல்ல வேணாம்னு தோணுதோ அத செய்யாதே ஏன்னா அது தப்பு" என்று கூறுவார்.

நாமும் இதை பின் பற்றினாள் போதுமே. நீங்க என்னும் எண்ணம் பிறரிடம் தயக்கமின்றி கூற முடியும் என்றால் அது நல்லவை. இல்லையேல் அது தீயவை. தீய செயலை முற்றிலும் தவிர்க்கவும்.

ஏன் தீய செயலை தவிர்க்க வேண்டும். தீய செயல் அந்நேரத்தில் சரி என தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு உயர் நிலையை அடையும் பொழுது, அந்த தீய செயல் உங்கள் இன்பத்தை கெடுக்கும். உங்களை மற்றவர்கள் மட்டுமின்றி நீங்களே வெறுக்கவும் செய்யும்.

இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Comments

Popular posts from this blog

நாம் ஏமாற்ற படுகிறோம்

இப்பொழுதெல்லாம் யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம் போல. அரசியலே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போ அரசியல் வர ஆரம்பிச்சிட்டாங்க. GST வந்த உடனே இனிமே உங்க field ல சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டு அரசியல் வந்திருவிங்களா. தமிழ்நாடு ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. மக்களும் மைக் பிடிச்சு பேசுறவங்கள நல்லவன்னு நம்பிட்டு support பண்றங்க. தயவு செய்து யோசிச்சு முடிவெடுங்கள் மக்களே. மக்களுக்கு கஷ்டம் வரும் பொது எட்டி கூட பாக்காதவன் எல்லாம் நமக்கு தலைவனா. இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு தோழர்களே. நாம மேலும் மேலும் ஏமாற்ற படுகிறோம் என்பதை உணருங்கள். சிந்தித்து செயல் படுங்கள். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

சிறுவனின் கதை

நான் கேட்டறிந்த கதை ஒன்றை இந்த பதிவில் கூற  போகிறேன் ஒரு ஊரில் ஆடுகள் மேய்க்கும் புத்திசாலி சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த அந்நாட்டு அரசன் அச்சிறுவனை சோதித்து பார்க்க முடிவெடுத்தான் காவலனை அழைத்து அச்சிறுவனை அழைத்து வர சொன்னான் அச்சிறுவனிடம், அரசன்: சிறுவனே உன்னிடம் நிறைய ஆடுகள் இருக்கிறது என அறிந்தேன். எனக்கு ஒரு ஆடு தேவை. சிறுவன்: வணக்கம் அரசரே! என்னிடம் நிறைய ஆடுகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஆடு எதுவோ அதை எடுத்து கொள்ளுங்கள். அரசன்: நான் கேட்கும் ஆடு கறுப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் எந்த நிறமும் கொண்டு இருக்க கூடாது. சிறுவன்:  (வியப்புடன்) அரசே, நிறமற்ற ஆடு இவ்வுலகத்தில் எங்கும் இல்லையே. அரசன்: எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் விரும்பியபடி ஆடு ஒன்றை கொண்டு வர வேண்டும். இல்லையேல் நீ தண்டிக்க படுவாய். வருத்தத்துடன் கிளம்பிய சிறுவன் அரசன் தன்னை சோதிக்க நினைப்பதை புரிந்து கொண்டான். ஒரு வாரத்திற்கு பிறகு அரசவையில், சிறுவன்: வணக்கம் அரசரே, நீங்கள் விரும்பியவாரே பல இடத்தில் தேடி ஒரு ஆட்டை கண்டு பிடுத்து விட்டேன் அரசன்: (ஆச்ச...

அழகு & பணம்

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் பணம் இருக்கும் இடத்தில் திமிரு இருக்கும் இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்