Skip to main content

Posts

Showing posts from June, 2017

கண்டிப்பாக படியுங்கள் இந்தியர்களே

நாம எல்லோரும் இந்தியர்கள் தானா. நம்ம நாட்டுக்காக சண்டை போடலாம் ஆனா நாம நமக்குள்ள சண்டை போடுறோம். சரி இந்தியா காக சண்டை போட முடியாது. நாம ஊருக்கு ஒரு பிரச்சனைன்னு சண்டை போட்ட கூட பரவா இல்ல. நாம ஊருக்குலையே அடிச்சுக்குறோம். நாம நமக்குள்ளயே அடிச்சிட்டு இருந்தா. நம்ம நாட்டுக்காக நம் மக்களுக்காக எப்போ தான் ஒண்ணா சேர்ந்து போராட போறோம். இத தான் நம்ம Government use பன்னிட்டு நம்மள ஏமாத்திட்டு இருகாங்க. நம்ம நண்பர்களுக்கு இருக்குற பிரச்சனை ரெண்டு தான். ஒன்னு பணம் இன்னொன்னு காமம். இந்த ரெண்டு மட்டும் இல்லனா நம்மள எவனும் எதுவும் பண்ண முடியாது. நம்மாளுங்க லவ் லவ் னு அலையுறாங்க. காசு தான் எல்லாம் னு நினைக்குறாங்க. Serious ah நாம இத சரி பண்ணி ஆகணும். இது சரி இல்ல, அது சரி இல்ல னு நாம சொல்றத விட்டு, நாம முதல சரி ஆகணும். மக்கள் ஒண்ணா சேரனும். இந்தியன் எவனுக்கு பிரச்சன்னை நாளும் அத தட்டி கேக்க எல்லோரும் வரணும். எந்த ஒரு rule போடணும் நாளும் Government பயப்படணும். இந்தியன் Government இந்தியர்களுக்காக தான் னு அவங்க உணரணும். மக்களே விழித்தெடுங்கள். இப்போவே உங்கள நீங்க சரி செய்ய தொடங்குங்க....

இன்று ஒரு சம்பவம் - பேருந்து

பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், என் அருகில் இரு சகோதிரிகள் அமர்ந்திருந்தனர். பேருந்து நடத்துனர் பயணச்சீட்டு வாங்காதவர்களை வாங்கும் படி கூறினார். ஒரு சகோதிரி தனது இடது கையில் பணம் குடுத்தாள். அதை கண்ட நடத்துனர் சகோதிரியை கண்டித்து வலது கையில் குடுக்கும் படி கூறினார். அந்த சகோதிரி தனது தவறை உணர்ந்து வலது கையில் பணம் குடுத்து பயணச்சீட்டு வாங்கினார். இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. காலம் காலமாக நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த பழக்கத்தை நாம் மறந்து வரும் இந்த காலத்தில், ஒரு நடத்துனர் அதை உணர வைத்தது மகிழ்ச்சி அளித்தது. மங்களகரமான காரியங்களுக்கு நாம் பெரும்பாலும் வலது கை தான் பயன்படுத்துகின்றோம். அது ஏன் என்பதை அறியவில்லை என்றாலும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்ததை பின்பற்றுவோம். இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

இன்று ஒரு தகவல் - Google I'm feeling lucky

நாம் அனைவரும் Google உபயோகிக்கின்றோம். நாம் தினமும் பல்வேறு தகவல்களை Google இல் தேடுகின்றோம். Google இல் "I’m Feeling Lucky" என்னும் ஒரு பொத்தான் இருக்கிறது. அதை நாம் பொதுவாக உபயோகிப்பது இல்லை. இருந்தாலும் அதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே. பொதுவாக, நாம் Google இல் ஏதேனும் தேடும் பொழுது நாம் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை திரட்டி நமக்கு காண்பிக்கிறது. அதில் எது நமக்கு தேவை என்று அறிந்து நாம் தேர்ந்தேடுக்கின்றோம். Google இல் உங்கள் தேடலை அடிப்படையாகக் கொண்டு சரியான இணைப்பை திறக்க வேண்டும் என்றால். "I’m Feeling Lucky" பொத்தானை நீங்கள் கிளிக் செய்யலாம். அப்படி கிளிக் செய்யும் பொழுது நீங்கள் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை காண்பிக்காமல் நேரடியாக முதல் பக்கத்தை திறந்து விடும். தேடல் பெட்டி காலியாக இருந்தால், Google Doodles Gallery யை திறந்து விடும். இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பைப் பார்க்கவும் Google - I'm Feeling Lucky இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

சிறுவனின் கதை

நான் கேட்டறிந்த கதை ஒன்றை இந்த பதிவில் கூற  போகிறேன் ஒரு ஊரில் ஆடுகள் மேய்க்கும் புத்திசாலி சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த அந்நாட்டு அரசன் அச்சிறுவனை சோதித்து பார்க்க முடிவெடுத்தான் காவலனை அழைத்து அச்சிறுவனை அழைத்து வர சொன்னான் அச்சிறுவனிடம், அரசன்: சிறுவனே உன்னிடம் நிறைய ஆடுகள் இருக்கிறது என அறிந்தேன். எனக்கு ஒரு ஆடு தேவை. சிறுவன்: வணக்கம் அரசரே! என்னிடம் நிறைய ஆடுகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஆடு எதுவோ அதை எடுத்து கொள்ளுங்கள். அரசன்: நான் கேட்கும் ஆடு கறுப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் எந்த நிறமும் கொண்டு இருக்க கூடாது. சிறுவன்:  (வியப்புடன்) அரசே, நிறமற்ற ஆடு இவ்வுலகத்தில் எங்கும் இல்லையே. அரசன்: எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் விரும்பியபடி ஆடு ஒன்றை கொண்டு வர வேண்டும். இல்லையேல் நீ தண்டிக்க படுவாய். வருத்தத்துடன் கிளம்பிய சிறுவன் அரசன் தன்னை சோதிக்க நினைப்பதை புரிந்து கொண்டான். ஒரு வாரத்திற்கு பிறகு அரசவையில், சிறுவன்: வணக்கம் அரசரே, நீங்கள் விரும்பியவாரே பல இடத்தில் தேடி ஒரு ஆட்டை கண்டு பிடுத்து விட்டேன் அரசன்: (ஆச்ச...

நல்ல எண்ணம் தீய எண்ணம்

நமக்குள் தினமும் 1000 எண்ணங்கள் எழுகின்றன. அவற்றில் சிலது நல்லவை மற்றும் சிலது தீயவை. நமக்கு எழும் எண்ணங்களில் எது நல்லவை மற்றும் எது தீயவை என்று எப்படி அறிவது. முதலில் நல்லவை என்றால் என்ன தீயவை என்றால் என்ன. ஒருவன் நல்லவை என்று என்னும் எண்ணம் மற்றொருவருக்கு தீயவை என்று தோன்றும். அப்படி இருக்க எது நல்லவை எது தீயவை என்று எப்படி அறிந்து கொள்வது. நல்லவை தீயவை என்பது அவரவர் மனதை சார்ந்தது. ஒரு செயல் அல்லது எண்ணம் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் அது நல்லது. உடனே நீங்கள் கேட்கலாம், என் எண்ணங்கள் யாவும் நல்லவை என்று என் மனதிற்கு தோன்றுகிறது அதனால் நான் அதை செயல் படுத்தலாமா என்று. மனிதனின் மனம் எந்நேரமும் ஒரு மாதிரி இருப்பது கிடையாது. இன்று நீங்கள் நல்லது என்று என்னும் செயல் நாளை தவறு என்று எண்ணக்கூடும். ஆகவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும், உங்கள் எண்ணம் நல்லவை என்பதை உறுதி செய்த பின்பு ஈடு பட வேண்டும். உங்கள் எண்ணம் நல்லவை என்பதை நீங்கள் சுலபமாக அறியலாம். சமுத்திரக்கனி இன் அப்பா படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் சமுத்திரக்கனி நன்றாக ஒரு வசனம் கூறி இருப்ப...

அழகு & பணம்

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் பணம் இருக்கும் இடத்தில் திமிரு இருக்கும் இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்